இலங்கை
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு
நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வினாடிக்கு 4,340 கனஅடி நீர் கொள்ளளவு கலாஓயாவில் வெளியேற்றப்படும் என இராஜாங்கனை நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதனால், கலா ஓயாவைச் சுற்றியுள்ள, பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
