இலங்கை
இன்டர்போல் சிவப்பு அறிவிப்பை எதிர்த்து குடு சலிந்து வழக்கு
இன்டர்போல் சிவப்பு அறிவிப்பை எதிர்த்து குடு சலிந்து வழக்கு
குடு சலிந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்டர்போல் சிவப்பு அறிவிப்பை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
வெளிநாட்டில் வசித்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான சலிந்து மல்ஷிகா குணரத்ன, அல்லது “குடு சலிந்து , மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அவரைக் கைது செய்வதற்காக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பை நிறுத்தி வைக்கக் கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குடு சலிந்துவின் வழக்கறிஞர்கள் மூலம் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுவைத் தொடர நீதிமன்றம் ஜனவரி 30, 2026 அன்று அனுமதி வழங்கியது.
ஜனவரி மாதம் விசாரணையின் போது ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதாக சட்டமா அதிபர் துறை நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான “குடு சலிந்து” தற்போது வெளிநாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கின்றார்.
