பொழுதுபோக்கு
உருவகேலி சர்ச்சை: எந்த உள்நோக்கமும் இல்ல; கெளரி கிஷன் மனக் காயத்திற்கு வருந்துகிறேன்: யூடியூபர் விளக்கம்
உருவகேலி சர்ச்சை: எந்த உள்நோக்கமும் இல்ல; கெளரி கிஷன் மனக் காயத்திற்கு வருந்துகிறேன்: யூடியூபர் விளக்கம்
தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். தொடர்ந்து, ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ எனத் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி மற்றும் துணை நடிகையாக நடித்து வருகிறார். தற்போது இவர் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அதர்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பத்திரிகையாளர், கெளரி கிஷனின் உடல் எடை குறித்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கெளரி கிஷனுக்கும் பத்திரிகையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் கெளரி கிஷனுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.இந்நிலையில், இச்சம்பவம் குறித்து நடிகை கெளரி கிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு பொதுப் பிரபலம் என்ற முறையில் விமர்சனங்கள் என் தொழிலின் ஒரு அங்கம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் ஒருவரின் உடல் அமைப்பையோ தோற்றத்தையோ குறிவைத்து கேட்கப்படும் கேள்விகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தச் சூழலிலும் பொருத்தமற்றவை. நான் அப்போது நடித்த படத்தைப் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்; அதற்காகவே நான் அங்கே இருந்தேன். இதே கேள்வி, அதே முறை, அதே குரலில் ஒரு ஆண் நடிகரிடம் கேட்டிருப்பார்களா என்று சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.pic.twitter.com/S8FeLoQlIbஅந்தச் சூழலில் நான் தைரியமாக என் நிலைப்பாட்டை எடுத்துரைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்காக மட்டுமல்ல, இதுபோன்ற நிலையை சந்தித்த அனைத்து பெண்களுக்கும் முக்கியமான ஒன்று. உருவ கேலி செய்வது, இன்னும் இந்த சமூகத்தில் நகைச்சுவையான அல்லது சாதாரண விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதை நாம் நிறுத்த வேண்டும். அழகை பற்றிய பொய்யான அளவுகோல்களை மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டும் இந்த நடைமுறையை நிறுத்த வேண்டிய நேரம் இது. இதுபோன்ற அனுபவம் யாருக்காவது ஏற்பட்டிருந்தால், அவர்கள் தங்கள் மனவலியைவெளிப்படுத்துவதற்கும், கேள்வி எழுப்புவதற்கும், மாற்றம் தேடுவதற்கும் முழு உரிமை உண்டு என்பதை இந்தச் சம்பவம் நியாபகப்படுத்தட்டும்.அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட நபரை குறிவைத்து தாக்குவது அல்லது தொந்தரவு செய்வது எனது நோக்கம் அல்ல என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். இந்தச் சம்பவத்தை, பரஸ்பர மரியாதை, கருணை, மற்றும் உணர்ச்சிசார் நுண்ணறிவு வளர்க்கும் வாய்ப்பாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் பெற்ற ஆதரவுக்கு இதயப்பூர்வமான நன்றி. சென்னை பத்திரிகையாளர் சங்கம், அம்மா சங்கம் (மலையாள திரைப்படத் துறை), தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.Others எனும் டைட்டில் கொண்ட படத்தின் ப்ரெஸ் மீட்டில் நடிகை கௌரி கிஷன் உடன் நடந்த வாக்குவாதம் இரண்டு நாட்களாக வைரலான நிலையில்..அதுபற்றி பத்திரிக்கையாளர் தினமலர் கார்த்திக் அளித்துள்ள விளக்கம். pic.twitter.com/q14Os0BGyZஇச்சம்பவம் குறித்து பத்திரிகையாளர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ கெளரி கிஷன் சம்பவத்தால் எனக்கு 2,3 நாட்களாக மன உளைச்சலாக இருந்தது. நான் இரு விதத்தில் கேள்வி கேட்டேன். அவர் ஒரு விதத்தில் புரிந்து கொண்டார். இதனால் அடுத்த பிரஸ் மீட்டில் மீண்டும் கேள்வி கேட்கும் சூழல் ஏற்பட்டது. அவரை நான் பாடி ஷேமிங் செய்யவில்லை. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அந்த கேள்வியால் அவர் பாதிக்கப்பட்டிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என்றார்.
