Connect with us

இந்தியா

தண்ணீர் கேன்களில் புழு, பூச்சிக்கள்: புதுச்சேரி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு

Published

on

Puducherry  20 Litre Water can and agencies examined Tamil News

Loading

தண்ணீர் கேன்களில் புழு, பூச்சிக்கள்: புதுச்சேரி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு

புதுச்சேரியில் விற்பனையாகி வரும் 20 லிட்டர் தண்ணீர் கேன்களில் புழு, பூச்சிக்கள் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர். புதுச்சேரியில் விற்பனையாகி வரும் 20 லிட்டர் தண்ணீர் கேன்களில் பூச்சிகள் மிதப்பதாக பொது மக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் உணவு கட்டுப்பாட்டு  அதிகாரிகளுக்கு அனுப்பட்டது. இதனையடுத்து, தண்ணீர் கேன் விற்பனை செய்யும் மொத்த விற்பனை நிலையங்களில் தண்ணீர் மாதிரி சேகரிக்கப்பட்டது. இவற்றை ஆய்வகத்தில் ஆய்வு செய்ததில் பொதுமக்களின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மொத்த தண்ணீர் விற்கும் நிலையங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். மேலும், விற்பனையாளர்களிடம்  விளக்கம் கேட்டும் குடிக்க தரமற்ற 20 லிட்டர் தண்ணீர் கேன்களை தரையில் ஊற்றியும் ஆய்வு மேற்கொண்டனர்.செய்தி: பாபு ராஜேந்திரன். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன