இலங்கை
யானைகள் அட்டகாசத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள்
யானைகள் அட்டகாசத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள்
மட்டக்களப்பு புதுகுடியிருப்பு பகுதிகளில் இரு நாட்களாக காட்டு யானைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றதாக பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் 4 மீனவர்களின் தோனிகளையும் விவசாய நிலங்களையும் பயன் தரும் தென்னை மரங்களையும், பலா ,வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் தொடர்ச்சியான காட்டு யானை தாக்குதலால் உயிர் அச்சத்தில் வாழும் மக்கள், யானைகளின் பிரச்சினையை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சில நாட்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் புதுக்குடியிருப்பு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
