இலங்கை
வசமாக சிக்கிய ‘மஹரகம அக்கா’ ; வீட்டிற்குள் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
வசமாக சிக்கிய ‘மஹரகம அக்கா’ ; வீட்டிற்குள் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
நுவரெலியா, வெலிமட, கெப்பட்டிப்பொல பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த பெண்ணொருவர் நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘மஹரகம அக்கா’ என அழைக்கப்படும் 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட பெண்ணிடமிருந்து போதைப்பொருள் வாங்கிய நபர்களிடமிருந்து பெறப்பட்ட தொலைபேசி தகவல்களுக்கமைய அவர் ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது வீட்டிலிருந்து 32 கிராம் ஹெரோயின் மற்றும் சந்தேகத்துக்குரிய போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
