Connect with us

விளையாட்டு

IND vs AUS 5th T20I Highlights: புகுந்து விளையாடிய மழை; பிரிஸ்பேன் ஆட்டம் ரத்து… ஆஸி.,-யை சாய்த்த இந்தியா தொடரை வென்று அசத்தல்

Published

on

IND vs AUS 5th T20I Live Score updates India vs Australia 5th T20I  The Gabba Brisbane Live Scorecard Online Streaming in Tamil

Loading

IND vs AUS 5th T20I Highlights: புகுந்து விளையாடிய மழை; பிரிஸ்பேன் ஆட்டம் ரத்து… ஆஸி.,-யை சாய்த்த இந்தியா தொடரை வென்று அசத்தல்

India vs Australia 5th T20I Highlights: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கான்பெராவில் நடந்த முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹோபார்ட்டில் நடந்த 3-வது போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதேபோல், குயின்ஸ்லாந்தில் நடந்த 4-வது போட்டியிலும் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிகள் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான  5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 1:45 மணி முதல் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் – இந்தியா பேட்டிங் இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடியது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமாடிய அபிஷேக் சர்மா – சுப்மான் கில் அதிரடியாக மட்டையைச் சுழற்றினர். இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தினர். அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். இதேபோல், கில் 6 பவுண்டரிகளை விரட்டி ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு தலைவலி கொடுத்தார். இப்படியாக ஆட்டம் விறுவிறுப்பாக சென்ற சூழலில், இந்திய அணி 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து கனமழையாக பெய்த காரணத்தால் போட்டியை நடத்திட முடியாத சூழல் ஏற்பட்டது. ஆட்டத்திற்கென வரையறுக்கப்பட்ட நேரம் முடிந்த நிலையில், போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 5 போட்டிகள் கொண்ட தொடர 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகித்த இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. கேப்டன் சூரியகுமார் கோப்பையை உயர்த்த, தொடரின் நாயகன் விருதை அபிஷேக் சர்மா வென்றார். இந்தத் தொடரைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வரும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் முதலில் நடக்கிறது. அதன்படி, இந்தியா – தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடக்கிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான  5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. தொடக்க வீரர்களாக களமாடியுள்ள அபிஷேக் சர்மா – சுப்மான் கில் அதிரடியாக மட்டையைச் சுழற்றினர். இந்திய அணி 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான  5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. தொடக்க வீரர்களாக களமாடியுள்ள அபிஷேக் சர்மா – சுப்மான் கில் அதிரடியாக மட்டையைச் சுழற்றி வருகிறார்கள். இந்திய அணி 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான  5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. தொடக்க வீரர்களாக களமாடியுள்ள அபிஷேக் சர்மா – சுப்மான் கில் அதிரடியாக மட்டையைச் சுழற்றி வருகிறார்கள். இந்நிலையில், இந்திய வீரர் அபிஷேக் சர்மா விளாசி பந்தில் வந்த 2 லட்டு கேட்சுகளை கோட்டை விட்டுள்ளனர் ஆஸ்திரேலிய வீரர்கள். அவர் 5 ரன் இருந்த போது கொடுத்த கேட்சை கிளென் மேக்ஸ்வெலும், அவர் 11 ரன்கள் இருந்த போது பென் ட்வார்ஷூயிசும் கேட்சை விட்டனர். 4-வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டு மிரட்டினார் அபிஷேக் சர்மா. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான  5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. தொடக்க வீரர்களாக களமாடியுள்ள அபிஷேக் சர்மா – சுப்மான் கில் அதிரடியாக மட்டையைச் சுழற்றி வருகிறார்கள். இந்திய அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 35 ரன்கள் எடுத்துள்ளது.  இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான  5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்த நிலையில், இந்தியா முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. தொடக்க வீரர்களாக களமாடியுள்ள அபிஷேக் சர்மா – சுப்மான் கில் அதிரடியாக மட்டையைச் சுழற்றி வருகிறார்கள். இந்திய அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா: அபிஷேக் சர்மா, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ராஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ஜோஷ் பிலிப், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், பென் ட்வார்ஷூயிஸ், சேவியர் பார்ட்லெட், எல்லிஸ், ஆடம் ஜாம்பாஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான  5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட்டிங் ஆடுகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான  5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. பிரிஸ்பேனில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மேலும் மழைப்பொழிவுக்கு 17% வாய்ப்புள்ளதாகவும், 73% ஈரப்பதமும், காற்று மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்பேனில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.பொதுவாக பிரிஸ்பேன் மைதானம் பவுன்சும், வேகமும் நிறைந்தது. அதனால் முந்தைய ஆட்டங்களை போல் சுழலின் தாக்கம் இருக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் கணித்து ஆடினால் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் சேர்க்கலாம்.பிரிஸ்பேனில் நடைபெறும் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான  5-வது மற்றும் கடைசி டி20 போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ ஹாட்ஸ்டார் ஆப்-பிலும் லைவ் ஆக பார்க்க்கலாம்!இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான  5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 1:45 மணி முதல் தொடங்கி நடக்கிறது. இப்போட்டிக்கான டாஸ் 1:15 மணிக்கு போடப்படும். இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி குறித்து உடனுக்குடன் அறிய எமது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன