இலங்கை
பணத்திற்காக பாலியல் வீடியோக்களை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்ற தம்பதியர்!
பணத்திற்காக பாலியல் வீடியோக்களை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்ற தம்பதியர்!
இங்கிலாந்தில் உள்ள சந்தா அடிப்படையிலான வயதுவந்தோர் வலைத்தளத்தில் தங்கள் நிர்வாண வீடியோக்களை பதிவேற்றிய ஒரு திருமணமான தம்பதியினர் நுகேகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுகேகொடை குழந்தைகள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணவர் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் பட்டதாரி என்றும், மனைவி ஒரு தனியார் நிறுவனத்தில் உளவியலில் டிப்ளோமா பட்டம் பெற்றவர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இராஜகிரியவில் உள்ள வீடொன்றில் இந்த கைது நடவடிக்க இடம்பெற்றுள்ளது. வீடியோவில் காணப்படும் பின்னணியும், வீட்டின் பின்னணியும் ஒத்துப்போவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வீடியோக்களை பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட ஒரு மொபைல் போன் மற்றும் எடிட்டிங் மற்றும் பதிவேற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மடிக்கணினி ஆகியவை வளாகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் தம்பதியினர் தளத்தில் 334 வீடியோக்களை பதிவேற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் அவர்கள் வெளிநாட்டு நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது, இதன் கீழ் அவர்கள் மாதத்திற்கு எட்டு வீடியோக்களை வழங்க வேண்டும்.
மாதந்தோறும் ரூ.150,000 முதல் ரூ.200,000 வரை சம்பாதித்ததாகவும், பார்வைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அதிக பணம் சம்பாதித்ததாகவும் தம்பதியினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் இன்று கொழும்பு அளுத்கம மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
