சினிமா
காந்தா படம் எப்படி இருக்கு!! பிரபல நடிகர் கொடுத்த விமர்சனம்…
காந்தா படம் எப்படி இருக்கு!! பிரபல நடிகர் கொடுத்த விமர்சனம்…
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான், ராணா டகுபதி உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்து வரும் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள படம் தான் காந்தா. மறைந்த திரைக்கலைஞர் எம் கே தியாகராஜ பாகவதரின் கதையை மையப்படுத்திய கதையாக உருவாகியுள்ளது காந்தா படம்.1950 காலக்கட்டத்தில் நடைபெறும் நடிகர்களுக்கு இடையேயான ஈகோ பிரச்சனையை மையமாகவும் கொண்டது இப்படம். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரது வரவேற்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.இந்நிலையில், படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் சமுத்திரக்கனி, படம் எப்படி இருக்கிறது என்று நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார் . அதில், இன்று தான் படத்தை பார்த்தேன். மிகவும் நிறைவாகவும் கனமாகவும் உள்ளது. துல்கர் சல்மானை பார்த்ததும் கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறது.அந்தளவிற்கு நன்றாக நடித்தீர்கள். கதையை உள்வாங்கி நடித்தீர்கள். இப்படத்தின் படப்பிடிப்புகளின்போது எப்போதும் நான் முதல் டேக்கில் நான் நடிக்கமாட்டேன். மாறாக துல்கர் சல்மான் நடிப்பதை பார்த்துக்கொண்டு இருப்பேன்.அப்போது செல்வமணி, நீங்கள் துல்கர் சல்மானையே பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று கூறுவார் மிகவும் அருகில் இருந்தால் அவரைத்தான் பார்க்க வேண்டும் அவர் நடிப்பதை ரசித்துக்கொண்டே இருப்பேன்.மிகவும் அருகில் உங்களது நவரசத்தையும் பார்த்ததில் மகிழ்ச்சி. உங்கள் திறமைக்கும், உழைப்புக்கும் மற்றவர்கள் மீது நீங்கள் காட்டும் அன்புக்கும் நீங்கள் இன்னும் பல உயரங்களுக்கு செல்வீர்கள் என்று சமூத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
