பொழுதுபோக்கு
அமித்தை டார்க்கெட் செய்யும் பிக்பாஸ்… வன்மத்தை கக்கிய திவாகர்; நெட்டிசன்கள் விமர்சனம்
அமித்தை டார்க்கெட் செய்யும் பிக்பாஸ்… வன்மத்தை கக்கிய திவாகர்; நெட்டிசன்கள் விமர்சனம்
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி 30 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. எப்போதும் இல்லாமல் இந்த சீசனில் சமூக வலைதளப் பிரபலங்கள் பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் வீடு என்றாலே பிரச்சனைகள் நிறைந்ததாக தான் இருக்கும், ஆனால் சீசன் 9 நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனையா? அல்லது பிரச்சனையில் பிக்பாஸ் வீடா? என்று அறியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். பொழுது போக்கிற்காக பிக்பாஸ் பார்த்து வந்த மக்கள் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் மன அமைதி கெட்டுவிடும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.அதாவது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது. பிரச்சனைகளை உருவாக்குவதற்கு மூலக்காரணமாக இருப்பதே வி.ஜே.பார்வதியும் திவாகரும் தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இருவர் இல்லாமல் ப்ரோமோ கூட வருவதில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாங்கள் தான் வெளியில் தெரிய வேண்டும் என்று பார்வதியும் திவாகரும் பல வேலைகளை செய்து வருகின்றனர்.சரி சாதாரண நேரம் தான் சண்டை போடுகிறீர்கள் டாஸ்க் கொடுத்தாலாவது ஒன்று சேர்ந்து செய்வார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை. டாஸ்க் கொடுத்தாலும் அதிலும் சண்டை தான் போடுகிறார்கள். சனிக்கிழமை நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, வி.ஜே.பார்வதியை கலாய்த்த ட்ரோல் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தான் செய்த வேலைக்கு கிரெடிட் கிடைக்கவில்லை என்று சொல்பவர்கள் யார் யார் என்று கேட்டார். அதற்கு எஃப்.ஜே நான் கார்னிவல் ஐடியா கொடுத்தேன் ஆனால் அதற்கு எனக்கு கிரெடிட் கிடைக்கவில்லை என்று அமித்தை குற்றம்சாட்டுகிறார்.அதேபோன்று அரோராவும் எஃப்.ஜே-வை அமித் பர்ஃபாமென்ஸ் செய்யவிடவில்லை என்றும் கெஸ்ட் பாராட்டும் போது அமித் எங்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் குற்றம்சாட்டுகிறார். அதற்கு அமித் நானும் தான் வேலை செய்தேன் இவர்கள் ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை என்றதும் விஜய் சேதுபதி அதவிடுங்க அடுத்தது வாங்க என்றதும் எஃப். ஜே-வை தீபக் தான் கம்மியா பர்ஃபாமென்ஸ் பண்ண சொன்னாரு என்று சொல்கிறார். அதற்கு விஜய் சேதுபதி, தீபக்கிட்டவே கேட்டுருவோம் என்று தீபக்கை வரவழைத்து கேட்கிறார்.அதற்கு தீபக் கேயாட்டிக்கா பண்ண வேண்டாம் என்டர்டெயின் பண்ற மாதிரி பண்ணலாம்னு சொன்னேன் என்கிறார். அதற்கு அமித் என்ன சொன்னார் என்றே தெரியவில்லை. அதை கட் செய்துவிட்டு அடுத்த கேள்விக்கு சென்றுவிட்டார்கள். இதை பார்க்கும் போது வேண்டும் என்றே பிக்பாஸ், அமித்தை அசிங்கப்படுத்துவது போன்று இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அடுத்து விஜய் சேதுபதி இந்த ஒரு நாளை கடந்துவிட்டால் அக்கவுண்டில் பணம் வந்துவிடும் என்று யார் இருக்கிறார் என்று கேட்டதும் பலரும் அரோராவை சொன்னார்கள். ஏன் என்றால் அரோரா வெளிப்படையாகவே அதை பேசியிருந்தார் முந்தைய நிகழ்ச்சியில். கனி மற்றும் வினோத் இருவரும் திவாகரை சொன்னார்கள். இதற்கு பழிவாக்கும் நோக்கத்தில் திவாகர், கனி மற்றும் வினோத்தை கூறினார். இதை பார்த்த நெட்டிசன்கள் திவாகர் வன்மத்தை கொட்டுவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
