இந்தியா
இந்தியாவின் வடகடல் பகுதியில் கடல் நீரை உறிஞ்சும் மேக கூட்டங்கள்!
இந்தியாவின் வடகடல் பகுதியில் கடல் நீரை உறிஞ்சும் மேக கூட்டங்கள்!
தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடுமான வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ராமேஸ்வரம் தீவு பகுதிகளான பாம்பன், தங்கச்சிமடம், அக்காள்மடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி வருகின்றது. குறித்த காலநிலையால் பாம்பன் வடகடல் பகுதியில் திடீரென மேக கூட்டங்கள் கடல் நீரை உறிஞ்சும் அரிய நிகழ்வு நடைபெற்றுள்ளது
இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த மீனவர்கள் கடல் நீரை உறிஞ்சும் மேகக் கூட்டங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டு கண்டுக்களித்தோடு, அதன் காணொளியை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
