பொழுதுபோக்கு
ஒரு தலைபட்சமாக செயல்படும் பிக்பாஸ்… ஆடியன்ஸ் கருத்து இதுதான்!
ஒரு தலைபட்சமாக செயல்படும் பிக்பாஸ்… ஆடியன்ஸ் கருத்து இதுதான்!
பிக்பாஸ் நிகழ்ச்சி 30 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. என்னதான் பிக்பாஸ் வீட்டில் சண்டைகளும் பிரச்சனைகளும் இருந்தாலும் மக்கள் அந்நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். ஒருபுறம் ரசிகர்கள் இருந்தாலும் மறுபுறம் பலர் பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த இரண்டு சீசன்களை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.கமல்ஹாசன் போல் இல்லாவிட்டாலும் தன் பாணியில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தேர்வில் பல ஏமாற்றங்கள் இருந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியும் தன் வேலையை ஒழுங்காக செய்யவில்லையோ என்ற கேள்வி மேலோங்கியுள்ளது. அதாவது, வாரம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் வாரத்தின் கடைசி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பார்கள்.ஏனென்றால் அன்று தான் போட்டியாளர்களின் தவறுகள் குறும்படங்கள் போன்றவற்றின் மூலம் எடுத்துரைக்கப்பட்ட அந்த வாரத்தில் அவர்கள் செய்த தவறு சுட்டிக் காட்டப்படும். கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொழுது இந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருப்பார்கள். ஆனால், தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பொழுது அந்த எதிர்பார்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஏனென்றால் கமல் என்ன நடந்தாலும் அதை குறும்படம் போட்டி காண்பித்து ஆணித் தரமாக நிரூபிப்பார்.ஆனால், விஜய் சேதுபதி தேவையில்லாததற்கு குறும்படம் போடுகிறார் என்றும் போட்டியாளர்கள் செய்த தவறை முறையாக சுட்டிக் காட்டவில்லை என்றும் கருத்துகள் மேலோங்கி வருகிறது. தற்போதுள்ள சீசன் 9 பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருந்தது. இதில் சனிக்கிழமை துஷார் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியில் பிரவீன் ராஜ் வெளியேற்றப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய செய்தது. ஏனென்றால் பிரவீன் ராஜ் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார். ஒரு போட்டியாளராக எவ்வளவு டஃப் கொடுக்க முடியுமோ அதை திறம்பட செய்தார்.ஆனால், ரம்யா, கனி, அரோரா, கெமி போன்றவர்கள் தங்கள் வேலைகளையும் செய்வதில்லை வெளியிலும் தெரிவதில்லை. அவர்களில் ஒருவரை எலிமினேட் செய்யாமல் நன்றாக விளையாடிய பிரவீன்ராஜை ஏன் எலிமினேட் செய்ய வேண்டும் என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வெளியே போவதற்கு முன் பிரவீன் ராஜ் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் எல்லாம் ஆடியன்ஸை கண்கலங்க வைத்தது. தகுதியற்றவர்கள் உள்ளே இருக்கும் பொழுது தகுதியுடையவர்கள் வெளியே செல்வது என்ன நியாயம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.மேலும், சனிக்கிழமை எபிசோடின் போது அமித்தை டார்கெட் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. அதாவது அமித் சொல்ல வரும் கருத்துக்களை சொல்லவிடாமல் விஜய் சேதுபதி தவறு செய்தவர்களுக்கு சப்போர்ட் செய்வதாகவும் கருத்து மேலோங்கி வருகிறது. மொத்தத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு தலை பட்சமாகவே செயல்படுகிறது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
