இந்தியா
கோவா அயர்ன் மேன் போட்டி: அண்ணாமலையை மனம் திறந்து பாராட்டிய பிரதமர் மோடி!
கோவா அயர்ன் மேன் போட்டி: அண்ணாமலையை மனம் திறந்து பாராட்டிய பிரதமர் மோடி!
கோவாவில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ‘அயர்ன் மேன்’ போட்டியில் வெற்றிகரமாகப் பங்கேற்று ட்ரையத்லானை நிறைவு செய்த பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மனம் திறந்து பாராட்டு தெரிவித்துள்ளார்.கோவாவில் நடைபெற்ற இந்திய அளவிலான இந்தப் போட்டிகள், நீச்சல், மிதிவண்டி ஓட்டம் மற்றும் ஓட்டப்பந்தயம் ஆகிய மூன்று கடினமான விளையாட்டுப் பிரிவுகளைத் தொடர்ச்சியாகக் கொண்டது. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்ற இந்தச் சவாலான ட்ரையத்லான் பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணாமலை கலந்துகொண்டு சிறந்து விளங்கினார். போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்த அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுப் பதிவை வெளியிட்டார். அதில், “அண்ணாமலை மற்றும் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் அயர்ன் மேன் ட்ரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.கோவாவில் இன்று நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் #FitIndia இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நமது கட்சியின் இளம் சகாக்களான… pic.twitter.com/wls0xzD9sRமேலும், இது போன்ற சாகசச் செயல்பாடுகள் ‘பிட் இந்தியா’ இயக்கத்திற்குப் பெரும் பங்களிக்கும் என்று பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார். கோவாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை இது காட்டுவதாகவும், இது இந்திய நாட்டின் உடல்தகுதி இயக்கத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்வதாகவும் கூறி அண்ணாமலையை வாழ்த்தி பிரதமர் தனது செய்தியை நிறைவு செய்தார்.
