சினிமா
நடிகை ஆண்ட்ரியா பெட்ல படுக்குறாரா, ஃப்ரிட்ஜ்ல படுக்குறாரா?.. விஜய் சேதுபதியா இப்படி கேட்டார்?
நடிகை ஆண்ட்ரியா பெட்ல படுக்குறாரா, ஃப்ரிட்ஜ்ல படுக்குறாரா?.. விஜய் சேதுபதியா இப்படி கேட்டார்?
நடிகை ஆண்ட்ரியா தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சினிமாவில் சம்பாதித்து வைத்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.இதன்பின் வடசென்னை, அரண்மனை, விஸ்வரூபம் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார். நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் பல லட்சம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.தற்போது இவர் மாஸ்க் படத்தில் கவின் உடன் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளிவர உள்ள நிலையில், நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் ஆண்ட்ரியா குறித்து விஜய் சேதுபதி பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதில், ” பீச்ல ஒரு சிலையை பார்த்தேன், அந்த சிலை போலவே ஆண்ட்ரியா இருக்கிறார். நரசூஸ் காபி விளம்பரத்தில் நடித்த ஆண்ட்ரியா மாஸ்க் படம் வரை அப்படியே எப்படி அதே இளமையுடன் இருக்கிறார் என்றே தெரியவில்லை.அவர் பெட்ல தூங்குறாரா? அல்லது ஃப்ரிட்ஜில் தூங்குறாரான்னே டவுட்டா இருக்கு, நாளைக்கு என் மகன் வந்தும் ஆண்ட்ரியா எப்படி அப்படியே இருக்கிறார் என வியந்து பார்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
