Connect with us

பொழுதுபோக்கு

நீச்சல் குளத்தில் மயக்கம்; திடீரென முகத்தைப் பிடித்த இயக்குநர்… உறைந்துபோன பிரபல நடிகை; தலை தெறிக்க ஓட்டம்!

Published

on

Mouni Roy

Loading

நீச்சல் குளத்தில் மயக்கம்; திடீரென முகத்தைப் பிடித்த இயக்குநர்… உறைந்துபோன பிரபல நடிகை; தலை தெறிக்க ஓட்டம்!

‘நாகினி’ சீரியல் மூலம் இந்தியா முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். முதல் சீசனிலேயே தனது வசீகரமான நடிப்பால் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தவர், இரண்டாவது சீசனிலும் தொடர்ந்தார். இந்த மாபெரும் வெற்றி, அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகளுக்கான கதவுகளையும் திறந்துவிட்டது. ஆனால், பளபளக்கும் இந்த சினிமா உலகின் ஆரம்பக் காலகட்டத்தில், அவர் ஒரு மோசமான, பயங்கரமான அனுபவத்தைச் சந்தித்திருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனது 21-வது வயதில் நடந்த அந்தச் சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.”உடல் நடுங்கத் தொடங்கியது…”அந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து மௌனி ராய் விவரிக்கையில், “எனக்கு அப்போது 21 வயது. ஒரு படத்துக்கான கதையைக் கேட்பதற்காக ஒருவர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு வேறு சிலரும் அமர்ந்திருந்தனர். அப்போது ஒருவர் ஒரு காட்சியைக் விளக்கத் தொடங்கினார். கதைப்படி, ‘கதாநாயகி நீச்சல் குளத்தில் விழுந்து மயங்கி விடுவார். உடனே நாயகன் அவருக்கு வாயில் ஊதி (Mouth-to-Mouth Resuscitation) சுவாசம் கொடுத்துக் காப்பாற்றுவார்’ என்பதுதான் அந்தக் காட்சி.இந்தக் காட்சியை விளக்குவதாகக் கூறிக்கொண்டே, அவர் திடீரென என் முகத்தைப் பிடித்துக் கொண்டு, என் முகத்துக்கு மிக மிக அருகில் நேராக வந்தார். அவர் செய்த அந்தச் செயலால் நான் அப்படியே உறைந்து போனேன். என்ன நடக்கிறது என்று தெரியாமல் என் உடல் நடுங்கத் தொடங்கியது. ஒரு நொடி கூட தாமதிக்காமல், நான் உடனடியாக அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன். ஆனால் அந்தச் சம்பவம், நீண்டகாலமாக எனக்குள் ஒரு பெரிய பயத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.பட வாய்ப்புக்காகச் சென்ற இடத்தில், கதை சொல்லும் போர்வையில் இப்படி அத்துமீறி நடந்துகொண்ட அந்த நபர் இயக்குநரா, நடிகரா, அல்லது காஸ்டிங் ஏஜென்டா? என்ற விவரத்தை மௌனி ராய் வெளியிடவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன