இலங்கை
போதைப்பொருள் தெடர்பான சுற்றிவளைப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!
போதைப்பொருள் தெடர்பான சுற்றிவளைப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!
விஷப் போதைப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்றும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், கடந்த தினத்தில் மாத்திரம் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (09) ஆயிரம் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் 1,284 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 7 கிலோ 21 கிராம் ஹெரோயினும், 4 கிலோ 715 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தவிர, ஹஷிஷ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட மேலும் பல போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட 16 சந்தேகநபர்களுக்குத் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 15 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 12,000 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
