பொழுதுபோக்கு
விஜய் சேதுபதி சீசனில் முதல் குறும்படம்; திவாகர், அரோராவுக்கு அட்வைஸ்: பிரவீன் இறுதி நாள் கண்ணீர்!
விஜய் சேதுபதி சீசனில் முதல் குறும்படம்; திவாகர், அரோராவுக்கு அட்வைஸ்: பிரவீன் இறுதி நாள் கண்ணீர்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும நிலையில், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய கடந்த சீசன் மற்றும் இந்த சீசனையும் சேர்த்து முதல்முறையாக குறும்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதேபோல் அரோரா, திவாகர் ஆகியோருக்கு விஜய் சேதுபதி குட்டு வைத்துள்ளார்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. தற்போது வரை 5 வாரங்கள் கடந்துள்ள நிலையில், மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போது 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். இதில் இந்த வாரம் துஷார் மற்றும் பிரவீன் ராஜ் என இரு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். இதில் சாம்பியன் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட துஷார் வெளியேற்றப்பட்டது ஒரு பக்கம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து. அதே சமயம், அரோரா, ரம்யா, கெமி போன்றவர்களை வெளியேற்றாமல் நன்றாக விளையாடும் பிரவீனை வெளியேற்றிருப்பது விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும பிக்பாஸ் வீட்டில் அடல்ட் கண்டெண்ட் பேசியது குறித்து சர்ச்சையில் சிக்கிய வி.ஜே.பார்வதி குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் கடந்த 2 சீசன்களில் முதல்முறையாக குறும்படம் போட்டு ஒருவரை பாராட்டியுள்ளார். அது சாண்ட்ரா தான். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சமீபத்தில் நடந்த 5 ஸ்டார் ஹோட்டல் டாஸ்கின்போது, பிக்பாஸ் தனக்கு தனியாக கொடுத்த டாஸ்கை சாண்டரா செய்துகொண்டிருந்தார். இந்த ஹோட்டல் டாஸ்கில் வெளியில் இருந்து கெஸ்ட் வர. போட்டியாளர்கள் அனைவரும் யுனிஃபார்மில் சுற்றி வந்தனர். அப்போது சாண்ட்ரா மட்டும் யாரையும் மதிக்காமல் தனது உடையில் சுற்றி வந்தார். நீ யூனிஃபார்ம் போட வேண்டும் என்று வி.ஜே.பார்வதி சொல்லியும் கேட்காத சாண்ட்ரா தனது இஷ்த்திற்கு நடந்துகொண்ட குறும்படத்தை தான் விஜய் சேதுபதி காட்டினார்.அதன்பிறகு இந்த வீட்டில் பணத்திற்காக மட்டும், இந்த நாள் கடந்தால் போதும், எனக்காக பேமண்ட் வந்துவிடும் என்று இருப்பது யார் என்ற கேள்விக்கு அனைவருமே அரோராவை தான சொன்னார்கள். இதன்பிறகு. அவருக்கு அட்வைஸ் கொடுத்த விஜய் சேதுபதி மீண்டும் அதே கேள்வியை கேட்க, திவாகர் எழுந்து, கனியை சொல்லி பேசிக்கொண்டிருக்க, நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை. என் சமபந்தமே இல்லாமல் பேசுறீங்க என்று கேடடார். அதன்பிறகு அரோராவிடம், நீங்கள் விளையாட வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு கிடைக்கும் பணம் சந்தோஷத்தை கொடுக்காது, என்ஜாய் பண்ணுங்க என்ற கூறியுள்ளார்.
