இலங்கை
யாழில் காணாமல் போன சிறுவன் : பெற்றோர் முறைப்பாடு!
யாழில் காணாமல் போன சிறுவன் : பெற்றோர் முறைப்பாடு!
17 வயதுடைய ச.சயோசியன் (மகன்) என்பவரை காணவில்லை என அவரது தந்தை யாழ். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் – மல்லாகம், நரியிட்டான் பகுதியில் வசித்துவந்த குறித்த தமது மகன் கடந்த 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று வீட்டைவிட்டு சென்ற நிலையில் இன்னும் வீடு திரும்பவில்லை என பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் பெற்றோர் அல்லது தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
