இலங்கை
இலங்கையில் தொடர்ந்து கைப்பற்றப்படும் துப்பாக்கிகள்

இலங்கையில் தொடர்ந்து கைப்பற்றப்படும் துப்பாக்கிகள்
வவுனியா – ஓமந்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாயக்குளம் பகுதியில் சந்தேக நபர் ஒருவர் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஓமந்தை பொலிஸாரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 58 வயதுடைய ஓமந்தை நாயக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் , அம்பாந்தோட்டை – லுணுகம்வெஹெர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் 60 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் லுணுகம்வெஹெர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.