இலங்கை
சிலப்பதிகார விழா இன்று ஆரம்பம்!

சிலப்பதிகார விழா இன்று ஆரம்பம்!
அகில இலங்கை இளங்கோ கழகம் நடாத்தும் சிலப்பதிகார விழாவானது இன்று வெள்ளிக்கிழமை(23) தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வானது அல்லையம்பதி வடிவேலர் மண்டபத்தில், மூன்று தினங்களும் பிற்பகல் 4 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதில் தமிழ் மற்றும் கலை சார்ந்த நிகழ்வுகளான தமிழ் அமுதம், வழக்காடு மன்றம், கவியரங்கு, கதாப்பிரசங்கம், இலக்கிய ஆணைக்குழு, விவாத அரங்கு, பட்டிமன்றம் போன்றன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.