இலங்கை
தண்ணீர்த் தொட்டியிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

தண்ணீர்த் தொட்டியிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம் தெல்லிப்பழைப் பகுதியில் உள்ள ஆள்களில்லாத வீட்டுத் தண்ணீர்த் தொடர்டியிலிருந்து இளைஞர் ஒருவர் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இணுவில் மேற்கைச் சேர்ந்த சசிகுமார் ஜீவன்சன் (வயது-20) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தந்தையின் வேலைத்தளத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டு தெல்லிப்பழையில் உள்ள குறித்த வீட்டுக்குச் சென்றிருந்த நிலையிலேயே அந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.