இலங்கை
அநியாயமாக பறிக்கப்பட்ட யுவதியின் உயிர்; ஈவிரக்கமற்ற செயல்

அநியாயமாக பறிக்கப்பட்ட யுவதியின் உயிர்; ஈவிரக்கமற்ற செயல்
வீதியில் இனந்தெரியாத நபரொருவர் யுவதி ஒருவரின் கழுத்தை வெட்டி அவரது கழுத்தில் இருந்த தங்க மாலையை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (02) மாலை இரத்தினபுரியில் குருவிட்ட தெவிபஹல – தொடன்எல்ல வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த யுவதி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குருவிட்ட – தெவிபஹல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி ஆவார்.
யுவதியின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.