இலங்கை
கொழும்பில் சூதாட்ட நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் பலி
கொழும்பில் சூதாட்ட நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் பலி
கொழும்பு கொச்சிக்கடை, அத்கல தேக்க வத்த பகுதியில் சூதாட்ட நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் நேற்று (04) கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கந்தானையைச் சேர்ந்த 53 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கையின் போது 25 பேர் அந்த நிலையத்திலிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விசேட நடவடிக்கையின் போது 9 பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
