இலங்கை
யாழில் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட முதியவரின் சடலம்
யாழில் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட முதியவரின் சடலம்
உடுவில் பொது நூலகத்துக்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து முதியவர் ஒருவரது உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
74 வயதுடைய முதியவர் ஒருவரே உடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முதியவர் அப்பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக யாசகம் பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் உடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
