இலங்கை

உயர்தரப் பரீட்சை தொடர்பில் மக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!

Published

on

உயர்தரப் பரீட்சை தொடர்பில் மக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!

உயர்தரப் பரீட்சை தினங்களில் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் செய்ய வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் காலை 8.30 மணியளவில் நாடளாவிய ரீதியில் 2,312 நிலையங்களில் உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Advertisement

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மக்கள் விதியாக இல்லாமல் உணர்வுடன் செய்ய வேண்டுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த பிள்ளைகளுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதைத் தீர்க்க உதவுமாறும்  

ஒவ்வொரு  பிள்ளைகளும் நல்ல சூழ்நிலையில் இந்த பரீட்சைக்கு தோற்ற வேண்டும் எனவும்  

Advertisement

தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்பதுடன் எனக்கு அனைவரின் ஆதரவும் தேவை. பரீட்சை நேரத்தில் இவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் எதையும் செய்யாதீர்கள்.

இது தொடர்பாக, பொலிஸாரிடம்  பேசி, தேவையான திட்டத்தை தயாரித்துள்ளோம்,” என்றார்.

மேலும் இன்று காலை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் நான்கு பரீட்சை பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisement

எனினும் கடற்படையும் இராணுவமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version