இலங்கை

ஜனாதிபதியின் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Published

on

ஜனாதிபதியின் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை, கொண்டாடுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், இன்றைய சமூகம் பல்வேறு பிரிவுகளால் வேறுபட்டிருந்தாலும், புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்கள் பிரிவுகளைக் கலைந்து சமூகத்திற்குள் மீண்டும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

சகவாழ்வை ஊக்குவித்து மற்றவர்கள் மீது கருணை காட்டும் ஒழுக்கத்தின் இருப்பை எமக்குள் ஏற்படுத்திக்கொள்வதே இந்தப் புத்தாண்டில் நமது பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version