சினிமா

கொண்டாட்டத்துடன் ஆரம்பமாகிய பிக்பாஸ் ஜோடியின் திருமணம்..! ஆரம்பமே அமோகமாக இருக்கே..!

Published

on

கொண்டாட்டத்துடன் ஆரம்பமாகிய பிக்பாஸ் ஜோடியின் திருமணம்..! ஆரம்பமே அமோகமாக இருக்கே..!

தமிழ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்ற ஜோடி தான் அமீர் – பாவனி. இந்நிகழ்ச்சியின் போது மலர்ந்த காதல் தற்பொழுது திருமண உறவாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இவர்கள் இருவரும் தற்பொழுது ஹால்டி functionஐ தங்களது குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.அந்நிகழ்வின் போது அமீர் பாவனியை ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு ராணி போல அழைத்து வருகின்றார். மேலும், பாவனி அதன்போது கலரை கையில் வைத்து சுழற்றிக் கொண்டு சந்தோசமாக டான்ஸ் ஆடுகின்றார். அத்துடன் இந்நிகழ்வில் பிரபல தொகுப்பாளினி பிரியங்காவும் இவர்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்துள்ள காட்சி அனைவரையும் vibe அடையவைத்துள்ளது. இவ்வாறாக அமீர்- பாவனியின் ஹால்டி function திருவிழா போல காட்சியளிக்கின்றது. இந்த நிகழ்வின் மூலம் அமீர் – பாவனி தங்களின் அடுத்த கட்ட வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளார்கள் என்பதனை அறியமுடிகிறது. இவர்களின் ஹால்டி நிகழ்வில் முக்கிய கவனம் பெற்றதாக டெக்கரேஷன் மற்றும் ஆடை என்பன காணப்படுகின்றன.இந்நிகழ்வு தற்பொழுது இணையத்தில் வைரலாகி அனைத்து ரசிகர்களையும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவில் மட்டுமல்ல, புகைப்படங்களிலும் இந்த ஜோடி மிகவும் அழகாகக் காணப்பட்டனர். பாவனி அமீருடன் இணைந்து டான்ஸ் ஆடி குதூகலிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதுடன் அதனைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அத்துடன் இந்நிகழ்வில் பல திரைப்பிரபலங்கள் பங்குபெற்றிக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version