இலங்கை

கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸார் சாரதிகளுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

Published

on

கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸார் சாரதிகளுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் இருந்து கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை ஊர்வலம் இடம்பெறவுள்ளதோடு,

Advertisement

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள விசேட ஆராதனைகள் காரணமாக இவ்வாறு வாகன போக்குவரத்து நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி ஊர்வலம் காலை 7.00 மணிமுதல் கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் ஆரம்பமாகி பொன்ஜீன் சந்தியின் இடது பக்கம் திரும்பி கல்பொத்த சுற்றுவட்டத்தில் கல்பொத்த வீதியில் சென்று ஜம்பட்டா வீதியின் ஊடாக கடலோர வீதிக்கு சென்று புனித அந்தோனியார் தேவாலயம் வரையில் செல்லவுள்ளது.

எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, இயன்றளவு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

அதற்கமைய, நாளை (21) காலை 7.00 மணி முதல் 11.45 மணிவரை கடலோர பொலிஸ் பிரிவில் உள்ள கீழ்வரும் வீதிகள் தற்காலிகமாக மூடப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.   

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version