சினிமா

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது பொய்யா..?வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை..!

Published

on

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது பொய்யா..?வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை..!

சின்னத்திரை நட்சத்திரங்களாக வலம் வருபவர்களில் முக்கியமான நபராகத் திகழ்பவர் பவித்ரா லட்சுமி. அத்தகைய திறமையான நடிகை, ஆரம்பத்தில் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு மக்கள் மனங்களைக் கவர்ந்தது மட்டுமல்லாது திரையுலகிலும் தன் தடங்களைப் பதிக்கத் தொடங்கியிருந்தார்.பவித்ரா லட்சுமியின் கவனத்தை முதலில் ஈர்த்த நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பவித்ரா, தனது நகைச்சுவை , திறமையான சமையல் திறன் என்பன மூலம் ரசிகர்களிடம் பெரியளவிலான இடத்தைப் பிடித்தார்.அதனைத் தொடர்ந்து, சதீஷ் ஹீரோவாக நடித்த ‘நாய் சேகர்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இத்தகைய நேர்மையான பயணத்திற்கிடையே, சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த செய்தி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த வதந்தி என்னவெனில், “பவித்ரா லட்சுமி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதால், அவரது உடலில் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார்” என்பது தான். இந்த வதந்தி சில ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் இந்த வதந்திகள் குறித்து நேரடியாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு மூலம் பதிலளித்துள்ளார் பவித்ரா லட்சுமி. அதில் அவர் கூறியதாவது: “நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறேன் என்பது முற்றிலும் பொய். அதுபோன்ற எந்த சிகிச்சையும் நான் செய்யவில்லை. என் உடல்நிலை சீராகத்தான் உள்ளது.” எனக் கூறியிருந்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version