சினிமா
Aunty ரோலில் நடிப்பதை விட இந்த ரோல் சிறந்தது.. பிரபல நடிகையின் பதிலால் கடுப்பான சிம்ரன்
Aunty ரோலில் நடிப்பதை விட இந்த ரோல் சிறந்தது.. பிரபல நடிகையின் பதிலால் கடுப்பான சிம்ரன்
தமிழ் சினிமாவில் 90 – ஸ் காலக்கட்டத்தில் டாப் நாயகியாக, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவே தலையில் வைத்து கொண்டாடிய நடிகையாக வலம் வந்தார் தெலுங்கிலும் ஒரு கலக்கு கலக்கியிருந்தார்.பீக்கில் இருந்த போது தனது நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2 மகன்கள் பெற்றவர் அவர்கள் கொஞ்சம் வளர்ந்த பிறகு மீண்டும் சினிமா பக்கம் வந்தார்.இந்நிலையில், சமீபத்தில் விருது விழா ஒன்றில் நடிகை ஒருவரை குறித்து சிம்ரன் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” என் கோ ஸ்டார் நடிகை ஒருவர் படத்தில் நடித்திருந்தார். அதை பார்த்து நான் உங்களை இந்த ரோலில் எதிர்பார்க்கவில்லை என்று அவருக்கு மெசேஜ் செய்தேன். உடனே அவர் ‘Aunty ரோலில் நடிப்பதை விட இந்த ரோல் சிறந்தது’ என எனக்கு மெசேஜ் செய்தார்.இப்படியொரு பதில் அவரிடம் இருந்து வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் என்ன சொன்னேனோ அது என்னோட கருத்து. நான் அவர் சொன்னதை விட நல்ல பதில் வரும் என எதிர்பாத்தேன்.டப்பா ரோல்களில் நடிப்பதை விட முக்கியமான Aunty ரோல்களை தேர்வு செய்து நடிக்கலாம். கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் நான் அதை செய்திருக்கிறேன்” என கூறியிருந்தார்.