சினிமா

அஜித் வழியில் கமல்! இனி ‘உலகநாயகன்’ அல்ல ‘KH’.!

Published

on

அஜித் வழியில் கமல்! இனி ‘உலகநாயகன்’ அல்ல ‘KH’.!

நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன், தனது திரையுலக பட்டமான் உலகநாயகன் எனும் அடைமொழியை துறந்துள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதில், ” என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பட்டங்களால் (ஆண்டவர்) என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்த இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்களின் பாராட்டின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வு உண்டு. சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்தக் கலையில் மேலும் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிற கலைகளைப் போலவே சினிமாவும் அனைவருக்குமானது.

திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்துதான் சினிமா உருவாகிறது. கலையை விடக் கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பதை உணர்ந்தவன். அதனால்தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். மேலே குறிப்பிட்டது. போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது.

எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன். இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். ” என்று கமல்ஹாசன் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version