சினிமா

‘அமரன் இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்!

Published

on

‘அமரன் இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்!

கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரன்’ படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

மேலும், கைவசம் ‘நிலவு என் மேல் என்னடி கோவம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய இரண்டு படங்களை இயக்கயும் வருகிறார். அதனைத் தொடர்ந்து இளையராஜா பயோ பிக் படத்திலும் நடித்து வருகிறார். இப்படி பிசியாக இருக்கும் தனுஷ் தற்போது சமீபத்தில் அமரன் எனும் வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமியுடன் கைகோர்த்துள்ளார்.

இது தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக தற்போது அமைந்துள்ளது. இந்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்களும் படக்குழு வெளியிட்டுள்ளது. படக்குழு வெளியிட்ட அந்த புகைப்படத்தை பார்க்கையில் ரசிகர்களுக்கு மேலும் ஒரு உற்சாகத்திற்கு சென்றுள்ளனர்.

அது என்னவென்றால், ஒரு புகைப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன், தனுஷுடன் இணைந்து ஸ்டில்ஸ் எடுத்துள்ளார். அதை வைத்து பார்க்கையில், ஒருவேளை வெற்றிமாறன் எழுதிய கதையை வைத்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷை வைத்து இயக்கவுள்ளாரா? என ஒரு தகவலை நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

மேலும், இப்படியும் ஒரு தகவலை ரசிகர்கள் கூறிவருகின்றனர். அது என்னெவன்றால், இயக்குநர் வெற்றிமாறன் இந்த படத்தில் ஏதேனும் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாரா? அல்லது தனுஷ் மீதான நட்பால் படத்தின் பூஜைக்கு கலந்து கொண்டாரா? என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். என்னவாக இருந்தாலும், படக்குழு இந்த D-55 தொடர்பாக அடுத்தகட்ட அப்டேட்டில் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version