சினிமா

அமரன் பார்த்துவிட்டு சூர்யா போட்ட பதிவு!

Published

on

அமரன் பார்த்துவிட்டு சூர்யா போட்ட பதிவு!

மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு பக்கம் இருந்தாலும், உணர்வுப்பூர்வமான மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை வைத்து இந்த படம் எடுக்கப்பட்ட காரணத்தால் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டு வருகிறது.

Advertisement

ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் படத்தைப் பாராட்டி இருந்தார்கள். அதைப்போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படம் பார்த்துப் பாராட்டி இருந்தார்கள். நேற்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமரன் படத்தினை பார்த்துவிட்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்து இருந்தார்.

அந்த வகையில், நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் படத்தினை பார்த்துவிட்டுப் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமியை நேரில் அழைத்துப் பாராட்டினார்கள். சிவகுமார், ஜோதிகா, சூர்யா என தனித்தனியாகப் படத்தினை பார்த்துவிட்டு இயக்குநரைப் பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில், சூர்யா தனியாகத் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்திலும் படம் குறித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” அமரன் படத்தின் மூலம் மேஜர் முகுந்த் மற்றும் ரெபேக்கா ஆகியோருடைய நிஜ வாழ்க்கையைப் பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. படத்தில் எல்லோரும் தங்கள் இதயத்தின் ஒரு பகுதியைக் கொடுத்திருப்பதைக் காண முடிந்தது. படத்தின் வெற்றிக்கு நான் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். தொடர்ச்சியாக அமரன் படக்குழுவுக்குப் பிரபலங்களுக்கு மத்தியிலிருந்து வாழ்த்துக்கள் கிடைத்து வருவது படக்குழுவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

Advertisement

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version