இந்தியா
உ.பி. சம்பல் பகுதியில் மசூதி ஆய்வுக்கு எதிர்ப்பு; போலீசாருடன் மோதலில் 3 பேர் பலி
உ.பி. சம்பல் பகுதியில் மசூதி ஆய்வுக்கு எதிர்ப்பு; போலீசாருடன் மோதலில் 3 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாஹி ஜமா மசூதியியில் ஆவுக்கு சென்றபோது உள்ளூர்வாசிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் 3 பேர் உயிரிழந்தனர். பல போலீசார் காயமடைந்தனர், காவல்துறை வாகனங்கள் எரிக்கப்பட்டன.ஆங்கிலத்தில் படிக்க: 3 killed as mob opposing survey of mosque clashes with police in UP’s Sambhalஇந்த மோதலில் இறந்தவர்கள் கோட் குர்வி பகுதியில் வசிக்கும் நயீம்; சராய் தரீன் பகுதியைச் சேர்ந்த பிலால்; சம்பலில் உள்ள ஹயாத் நகரில் வசித்த நுமான் என அடையாளம் காணப்பட்டனர். அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.உள்ளூர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிஷனர் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்த 6 பேர் இன்று (நவம்பர் 24) காலை 7 மணியளவில் இரண்டாவது முறை ஆய்வுக்காக சந்தௌசி நகரில் உள்ள மசூதிக்குள் நுழைந்தபோது மோதல் தொடங்கியது. நவம்பர் 19-ம் தேதி முதல் ஆய்வு நடத்தப்பட்டது. மசூதி இருந்த இடத்தில் முன்பு கோயில் இருந்ததாகக் கூறி உள்ளூர் நீதிமன்றத்தில் ஒரு கோயில் பூசாரி மனு அனுப்பியதை அடுத்து ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. அவர் 1529-ல் ஷாஹி ஜமா மஸ்ஜிதைக் கட்டுவதற்காக முஸ்லீம் ஆட்சியாளர்கள் அதை இடித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.“அன்றைய பணியை முடித்துக் கொண்டு ஆய்வுக் குழு மசூதியை விட்டு வெளியேறியபோது மீண்டும் வன்முறை வெடித்தது. 3 திசைகளிலிருந்தும் ஒரு கூட்டம் கூடி, போலீசார் மற்றும் ஆய்வுக் குழு உறுப்பினர்கள் மீது கற்களை வீசத் தொடங்கியது. கூட்டத்தினர் 3 குழுக்களாகப் பிரிந்து துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர். பதிலுக்கு, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதோடு, கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி கல் எறிந்தவர்களை கலைத்தனர்” என்று மொராதாபாத் பிரதேச ஆணையர் அவுஞ்சநேய குமார் சிங் கூறினார்.“முதன்மையாக துப்பாக்கி தோட்டா காயங்களால் 3 பேர் உயிரிழந்தனர், அதே நேரத்தில் காவல்துறை கண்காணிப்பாளரின் மக்கள் தொடர்பு அதிகாரி உட்பட சுமார் ஒரு டஜன் போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி குண்டுகளால் காயம் அடைந்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று மொராதாபாத் பிரதேச ஆணையர் அவுஞ்சநேய குமார் சிங் கூறினார்.மேலும், “இதுவரை, நாங்கள் 15 பேரை கைது செய்துள்ளோம், மேலும், அவர்களின் வீடுகளின் கூரையிலிருந்து கற்களை வீசிய இரண்டு பெண்கள் உட்பட 4 கைது செய்துள்ளோம்” என்று மொராதாபாத் பிரதேச ஆணையர் அவுஞ்சநேய குமார் சிங் கூறினார்.இறந்தவர்களில் ஒருவரான நயீமின் பெற்றோர், தங்கள் மகன் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை அதிகாரிகள் மறுத்துள்ளனர். “காவல்துறையினர் தங்களைத் தாங்களே சுட முடியாது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி அமைதியான முறையில் நடந்த ஆய்வுப் பணியை கற்களை எறிந்து சீர்குலைக்கத் திட்டமிட்டால், அவரைக் கட்டுப்படுத்துவது குடும்ப உறுப்பினர்களின் பொறுப்பாகும். அப்போது 3 குழுக்களும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன, ஆனால், தற்போது எங்கள் முன்னுரிமை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை மீட்டெடுப்பதாகும்” என்று மொராதாபாத் பிரதேச ஆணையர் அவுஞ்சநேய குமார் சிங் கூறினார்.ஞாயிற்றுக்கிழமை வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக சம்பல் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) கிருஷ்ண குமார் பிஷ்னோய் தெரிவித்தார். “நாங்கள் இதுவரை 15 பேரை அடையாளம் கண்டுள்ளோம், கைது செய்துள்ளோம், மற்றவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொறுப்பற்ற முறையில் வன்முறையில் ஈடுபட்டதற்காக அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்.எஸ்.ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்” என்று கூறினார்.