சினிமா

கங்குவா படக்குழுவுக்கு பேரதிர்ச்சி.! எடிட்டர் ‘திடீர்’ மரணம்.!

Published

on

கங்குவா படக்குழுவுக்கு பேரதிர்ச்சி.! எடிட்டர் ‘திடீர்’ மரணம்.!

சூர்யா நடிப்பில் வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி வெளியாக உள்ள பிரமாண்ட திரைப்படம் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

Advertisement

பட ரிலீசுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் படக்குழுவுக்கு பேரதிர்ச்சி தரும் சம்பவமாக படத்தின் தொகுப்பாளர் (எடிட்டர்) நிஷாத் யூசுப் இன்று (ஒக்டோபர் 30) உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை மலையாள சினிமா சங்கம் அறிவித்துள்ளது.

இவரது உடல் இன்று காலை கொச்சி அருகே பனம்பிள்ளியில் உள்ள அவரது அப்பார்ட்மென்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் நிஷாத் யூசுப் மரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இவரது மரணம் இன்று அதிகாலை 2 மணியளவில் நேர்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. [எ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version