சினிமா
காதலரை மணந்தார் நடிகை ரம்யா பாண்டியன்!
காதலரை மணந்தார் நடிகை ரம்யா பாண்டியன்!
குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா மற்றும் வாழ்க்கை பயிற்சியாளருமான லவ்ல் தவானுக்கும், ரிஷிகேஷில் உள்ள ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதி பாயும் கரையில் இன்று Love & Arranged Marriage சிறப்பாக நடந்தது.
ஆம், ஆற்றின் கரையில் சிறிய மேடை அமைக்கப்பட்டு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
அதன்படி, மணமக்களுடன் ரம்யாவின் சித்தப்பா அருண் பாண்டியன், அம்மா சாந்தி துரைப்பாண்டி, தாய் மாமா கணேஷ் குமார் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். அவர்களை தவிர, நடிகர் அசோக் செல்வன், அவரது மனைவி மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன், ரம்யா பாண்டியனின் உறவினர் சகோதரியும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
தற்பொழுது, பிரபலங்கள் பலரும் ரம்யா பாண்டியனுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். திருமணத்தை தொடர்ந்து, இந்த ஜோடி நவம்பர் 15ம் திகதி அன்று சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.