இலங்கை

கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Published

on

கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்கள் உரிய முறையில் பொருட்களை விற்பனை செய்கின்றனவா என்பதை கண்டறிய விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபை (Consumer Affairs Authority)  இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

Advertisement

இதன்படி கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் காலாவதியான பொருட்களை சந்தையில் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை நிலையங்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 1977 என்ற இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் தங்களது முறைப்பாடுகளை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  (ப)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version