சினிமா

சினிமா பின்புலத்தை வைத்து தாக்கிய நயன்தாரா!

Published

on

சினிமா பின்புலத்தை வைத்து தாக்கிய நயன்தாரா!

வரும் நவம்பர் 18-ஆம் திகதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த திருமண வீடியோவில் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பயன்படுத்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி தரவில்லை என இன்ஸ்டாவில் தனுஷுக்கு ஒரு கடிதம் எழுதி தனது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் நயன்தாரா.

Advertisement

இந்த சம்பவம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய், சூர்யா, சிம்பு, பிரஷாந்த் போன்ற நடிகர்கள் சினிமாவின் பின்புலத்தால் சினிமாவிற்கு அடியெடுத்தது வைத்தனர். ஆனால், அதன் பிறகு தமிழ் சினிமாவில் நீடித்து நிற்பது அவர்களது தனிப்பட்ட உழைப்பு தான்.

அந்த வரிசையில் நடிகர் தனுஷும் ஒரு தவிர்க்க முடியாத ஆல் தான். இயக்குநர் கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவனின் பின்புலத்தை வைத்தும் சினிமாவில் அவர் நடிக்க தொடங்கி இருந்தாலும். அவரது தனிப்பட்ட உழைப்பால் மட்டுமே அவர் தற்போது அதிக ரசிகர்களை கொண்ட நடிகராகவும், தனக்கென மார்க்கெட்டையும் கைக்குள் வைத்துள்ளார்.

ஒருவரை தாக்கி பேச வேண்டுமென்றால் அதற்கு ‘சினிமாவில் நீ இப்படி தான் வந்தாய்’ என பின்புலத்தை வைத்து தாக்கி பேசுவது தவறு தான். அப்படி தான் தற்போது நயன்தாரா தனுஷை குற்றம் சாட்டி எழுதிய கடிதத்தின் முதலில் அவரது சினிமா பின்புலத்தை குறிப்பிட்டு தாக்கி பேசியிருக்கிறார். இது அவரது ரசிகர்கள் உட்பட, பலரும் கண்டித்து வருகின்றனர்.

Advertisement

அவர் இது குறித்து பேசிய போது, “பல தவறான விஷயங்களைச் சரி செய்வதற்காகவே வெளிப்படையான இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உங்கள் தந்தை கஸ்தூரி ராஜா உறுதுணையோடு உங்கள் அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் திரைத்துறைக்கு வந்து பிரபல நடிகராக மாறியிருக்கும் நீங்கள் நிச்சயம் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் தனி ஒரு பெண்ணாக, சவால்கள் நிறைந்த திரைத்துறைக்கு வந்து, கடின உழைப்பாலும், நேர்மையான அர்ப்பணிப்பாலும் இன்றைய நிலையை அடைந்திருக்கிறேன். நேர்மறையான எனது பயணத்தை என் மீது அன்பு செலுத்தும் எனது ரசிகர்களும், திரைத்துறையினரும் நன்றாகவே அறிவார்கள்” என குறிப்பிட்டு நயன்தாரா பேசி இருக்கிறார்.

இதற்கு தனுஷ் ரசிகர்கள் உட்பட பிரபல யூட்யூபர்கள், ஒரு சில சினிமா பிரபலங்கள் என அனைவரும் இந்த வரிகளையும், வார்த்தைகளையும் கண்டித்து தனுஷுக்கு ஆதரவாகவே தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

அதிலும், குறிப்பாக, ‘யார் மகன் என்பது இங்கே முக்கியம் இல்லை. அவரது கடின உழைப்பால் தான் இன்று பெரிய நடிகராக வளர்ந்து இருக்கிறார். அதனால் இப்படி சினிமா பின்புலத்தை வைத்து தாக்கி பேசுவது என்பது தவறான செயலாகும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version