சினிமா

சூர்யாவுக்காக தம்பி கார்த்தி எடுக்கும் ரிஸ்க்!

Published

on

சூர்யாவுக்காக தம்பி கார்த்தி எடுக்கும் ரிஸ்க்!

கங்குவா படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 14-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் காட்சிகள் இருக்கிறது என்பது படத்தின் டிரைலரை வைத்து பார்க்கும்போதே நமக்குத் தெரிந்தது. அதிலும் விடை தெரியாத ஒரு குழப்பமாக இருப்பது என்னவென்றால், படத்தில் கார்த்தி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறாரா? இல்லையா? என்பது தான்.

Advertisement

ஏனென்றால், ஏற்கனவே, படத்தின் முதல் டிரைலர் வெளியான சமயத்திலே ஒரு சிறிய காட்சி ஒன்று வந்தபோது அதில் முகத்தை மறைத்துக் கொண்டு வந்தது கார்த்தி தான் எனவும், இரண்டாவது பக்கத்தில் அவருடைய கதாபாத்திரம் படத்தினுடன் ட்ராவல் செய்யும் ஒரு கதாபாத்திரமாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான இரண்டாவது டிரைலரில் முகம் தெரியாத ஒரு ஆள் சிரிப்பது போலவும் அவருடைய பற்களை மட்டும் காட்டியிருந்தார்கள். அந்த காட்சியைப் பார்த்த பலரும் இதில் வருவது கார்த்தி தான் எனவும், அவருடைய சிரிப்பு இப்படி தான் இருக்கும் எனவே, அவர் நடித்துள்ளது உறுதி எனக் கூறி வருகிறார்கள்.

ஆனால், நம்பத்தக்க சினிமா வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலின் படி, அந்த காட்சியில் வருவது கார்த்தி தான் எனவும் அவர் முதல் முறையாக இந்த படத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை கார்த்தி தான் நடித்த படங்களில் எந்த படங்களிலும் புகைபிடிக்கும் காட்சிகளில் நடித்தது இல்லை.

Advertisement

அப்படியான காட்சிகள் வைத்து படங்கள் வந்தாலும் கூட அந்த காட்சிகளை மாற்றச் சொல்லிவிடுவார் என்ற தகவலை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இந்த முறை அண்ணனுக்காகவும், கங்குவா படத்திற்கு அது போலக் காட்சி மிகவும் தேவையாக இருப்பதால் அந்த காட்சியில் நடிக்க கார்த்தி ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உண்மையில் அது கார்த்தி தானா? அல்லது வேறு நடிகரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version