சினிமா

டிராகன் படத்தில் இணைந்த கயாடு லோஹர்!

Published

on

டிராகன் படத்தில் இணைந்த கயாடு லோஹர்!

ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அதில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தவர் பிரதீப் ரங்கநாதன். பிறகு ‘லவ் டுடே’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, அப்படத்தை எழுதி இயக்கி வெற்றிபெற்றார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடிக்கும் அவர், ‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‘டிராகன்’ படத்திலும் நடிக்கிறார். இதில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு கிரித்தி ஷெட்டி ஜோடியாக நடிக்க, ‘டிராகன்’ படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக நடிக்கிறார்.

Advertisement

இந்தநிலையில், இப்படத்தில் இன்னொரு நடிகை கயாடு லோஹர் ஒப்பந்தமாகி இருக்கிறார். 2021ல் கன்னடத்தில் ‘முகில் பேட்டை’, 2022ல் மலையாளத்தில் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’, தெலுங்கில் ‘அல்லூரி’, 2023ல் மராத்தியில் ‘ஐ பிரேம் யூ’, மீண்டும் மலையாளத்தில் ‘ஒரு ஜாதி ஜாதகம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள கயாடு லோஹர், கோலிவுட்டுக்கு வர நல்ல கதைகளை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். முன்னதாக அவர், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. பிறகு அவரை நீக்கிவிட்டு சித்தி இத்னானி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version