சினிமா

தாய் ஆக காத்திருக்கிறேன்: சமந்தா உருக்கம்

Published

on

தாய் ஆக காத்திருக்கிறேன்: சமந்தா உருக்கம்

தாயாக ஆசைப்படுவதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். ‘பாணா காத்தாடி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சமந்தா, பல வெற்றிப்படங்கள் மூலம் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Advertisement

தற்போது அவர் நடித்துள்ள ‘சிட்டாடல்’ என்ற வெப் சீரிஸ் அமேசானில் கடந்த வாரம் வெளியாகிவிட்டது. இந்த வெப்சீரிஸில் குழந்தை நட்சத்திரம் காஷ்வி மஜ்முந்தருக்கு தாயாக சமந்தா நடித்திருப்பார்.  இந்நிலையில் இந்த வெப்சீரிஸ் தொடர்பான பேட்டி ஒன்றில், காஷ்வி மஜ்முந்தருக்கு தாயாக இருந்தீர்கள். படப்பிடிப்பு முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.

அதனால் தாய் என்ற கேரக்டரை மிஸ் பண்ணுகிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சமந்தா, ‘குழந்தை நட்சத்திரத்துடன் பணிபுரிவது ஒரு நம்பமுடியாத அனுபவம். இது மிகவும் திறமையானது. நான் என் மகளுடன் பழகுவது போல் உணர்ந்தேன். எனக்கு தாயாக வேண்டும் என ஆசை. அது மிகவும் அழகான அனுபவம். அதற்காக நான் காத்திருக்கிறேன். மக்கள் என் வயதைப் பற்றி கவலைப்படுகிறார்கள். ஆனால் அதற்கு இன்னும் தாமதம் ஆகவில்லை. தாயாக முடியாத காலம் என்பது நமது வாழ்வில் இல்லை என்று நினைக்கிறேன்’ என கூறினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version