சினிமா

தெறிக்கவிடும் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர்.!

Published

on

தெறிக்கவிடும் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர்.!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியிடும் நிகழ்ச்சி லக்னோவில் நடைபெற்றது, இதில் படத்தின் முன்னணி நட்சத்திரங்கள் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

டீசரின் தொடக்கத்திலேயே ஷங்கரின் பிரம்மாண்டம் நம் கண்களை விரியச் செய்கிறது. டீசரை பார்க்கும் போது அரசியலை மையப்படுத்திய ‘பொலிட்டிக்கல் டிராமா’கதையாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

ராம்சரணின் ஆக்ரோஷமும், எஸ்.ஜே. சூர்யாவின் வில்லத்தனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சொல்லபோனால், இயக்குநர் ஷங்கர் மற்றொரு அரசியல் த்ரில்லர் படத்துடன் மீண்டும் வந்துள்ளார் என்றே செல்ல வேண்டும்.

கடைசியாக அவரது இயக்கத்தில், வெளியான ‘இந்தியன் 2’ திரைப்படம் முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களையும் மாறிமாறி ஒரே நேரத்தில் இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் இந்த விழாவில் இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட நான்கு வருட காத்திருப்புக்குப் பிறகு, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் திகதி அன்று சங்கராந்தி பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்னதாக வெளியாகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version