சினிமா

நடிகை கஸ்தூரி தலைமறைவு!

Published

on

நடிகை கஸ்தூரி தலைமறைவு!

பிராமணர்களுக்கும் தனி வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்தது.

Advertisement

இதைத் தொடர்ந்து கஸ்தூரி மீது தெலுங்கு அமைப்புகள் சார்பில் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் புகார்கள் கூறப்பட்டு வந்தது.

அந்த வகையில் சென்னை எழும்பூரில் தெலுங்கு அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில்  4 பிரிவுகளின் கீழ் அவர் மீது பொலிஸார்   வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக காவல் துறையினர் சம்மன் கொடுக்க சென்றபோது நடிகை கஸ்தூரி தலைமறைவாகி உள்ளது தெரியவந்தது. 

Advertisement

கஸ்தூரியின் செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவரை தேடுவதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக எழும்பூர் காவல் நிலையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version