சினிமா

நலன் – கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டீசர்!

Published

on

நலன் – கார்த்தியின் ‘வா வாத்தியார்’ டீசர்!

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி? – இந்தப் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார் கார்த்தி. மொத்த டீசரும், இசையிலேயே நகர்கிறது.

Advertisement

ஆனந்த் ராஜுக்கான ‘எம்ஜிஆர்’ கெட்டப், சத்யராஜின் வித்தியாசமான தோற்றம், எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண் என கதாபாத்திரங்கள் கவர்கின்றன. இடையில் நம்பியார் ரெஃபரன்ஸ் வந்து செல்கிறது. கீர்த்தி ஷெட்டி தலையை காட்டி செல்கிறார். முழுக்க முழுக்க கார்த்தியின் நடனத்திலேயே டீசர் முடிகிறது. படத்தின் எந்த அம்சத்தையும் பெரிய அளவில் வெளிப்படுத்தாத டீசர் கதாபாத்திரங்களின் தோற்றங்கள் மற்றும் இசை மூலம் கவனிக்க வைக்கிறது.

வா வாத்தியார்: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படத்துக்கு ‘வா வாத்தியார்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த் ராஜ், ஜி.எம்.குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version