விளையாட்டு

நீச்சல் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டி – துள்ளி குதித்து திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள்…

Published

on

Loading

நீச்சல் மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டி – துள்ளி குதித்து திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள்…

நீச்சல்,ஜிம்னாஸ்டிக் போட்டியில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர் 

Advertisement

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நடந்தது. 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர்‌ என 3 பிரிவுகளின் கீழ் தனித்தனியாக நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் காலை தொடங்கி மாலை வரை போட்டிகள் நடைபெற்றது. இதனிடையே மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் ஜிம்னாஸ்டிக் போட்டி நடந்தது. இதில் 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர்‌ என தனித்தனியாக 3 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது.

Advertisement

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள். மாவட்ட அளவிலான போட்டியில் வென்றவர்கள் மாநில போட்டியில் பங்கேற்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version