சினிமா

பண்ணையில் வேலை பார்க்கும் மோகன்லால் மகன்!

Published

on

பண்ணையில் வேலை பார்க்கும் மோகன்லால் மகன்!

ஸ்பெயினிலுள்ள பண்ணை ஒன்றில் மோகன்லால் மகனும் நடிகருமான பிரணவ், வேலை பார்த்து வருகிறார். மோகன்லாலின் மகனான பிரணவ், வித்தியாசமானவர். வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டும் நடிப்பார். அதில் வாங்கும் சம்பளத்தைக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்பிவிடுவார். 3 மாதம் 4 மாதம் என வெளிநாடுகளில் இருப்பார். மற்ற நடிகர்களைப் போல் ஜாலியாக டூர் கொண்டாட அவர் அங்கு போவதில்லை. மாற்றாக, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பழக்க வழக்கங்கள், கலாசாராம், மக்களை அறிந்துகொள்ள வழிப்போக்கன் போல் அவர் அந்நாடுகளுக்கு செல்கிறார்.

Advertisement

அங்கு சென்றதும் நடைபயணமாக பல கி.மீ. தூரம் நடந்து செல்வார். அங்குள்ள மக்களை சந்திப்பார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார். இரவாகிவிட்டால், சாலையோரம் படுத்து தூங்குவார். பிறகு நாடு திரும்பியதும், மற்ற நடிகர்களைப் போல், படப்பிடிப்பில் பங்கேற்பார். இவர் வழிப்போக்கனாக மாறிவிட்டால், இந்தியாவிலிருந்து யாரும் இவரை தொடர்புகொள்ளவே முடியாது. இப்போது அவர் ஸ்பெயினில் ஒரு ஊரில் மிருகங்களுக்கான பண்ணையில் வேலை பார்த்து வருகிறார்.

இதற்காக சம்பளம் எதுவும் பெறாத அவர், உணவு, இருப்பிடம் மட்டும் கொடுத்தால் போதும் என தனது முதலாளியிடம் கூறிவிட்டாராம். அங்குள்ள ஆடு, மாடுகள், குதிரைகள் ஆகியவற்றை அவர் பராமரித்து வருகிறார். இது குறித்து மோகன்லாலின் மனைவி சுசித்ரா கூறும்போது, ‘பயணம் முடிந்து வந்த பிறகு அந்த அனுபவங்களை என்னிடம் பிரணவ் சொல்லுவான். அவன் இதுபோல் இருப்பது அவனுக்கு பிடித்திருக்கிறது. அதனால் அவனை எதுவும் சொல்லாதே என அவர் (மோகன்லால்) சொல்லிவிட்டார். அவனும் தனது பணத்தில்தான் இதையெல்லாம் செய்வேன் என்கிறான். அதற்காக மட்டுமே அவன் சினிமாவில் நடிக்கிறான்’ என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version