சினிமா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கும் பிரபலங்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கும் பிரபலங்கள்!
பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சியானது ஒரு பரபரப்பு இல்லாமல் சைலண்டாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முந்திய சீசன்களை இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் கூட இதனைவிட அதிக அளவுக்குப் பரபரப்பாகப் பேசப்பட்டது என்றே சொல்லலாம். எனவே, டி.ஆர்.பி ரேட்டிங்கும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் நிகழ்ச்சியில் சில பிரபலங்களையும் சிறப்பு விருந்தினராகக் களமிறக்கத் திட்டமிட்டு விஜய் தொலைக்காட்சி அதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக, சொல்லவேண்டும் என்றால் அமரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவகார்த்திகேயனையும், ப்ளடி பக்கர் படத்தின் ப்ரோமோஷனுக்காக கவினையும் களமிறக்கி இருந்தது. இதன் மூலம் அவர்களுடைய படங்கள் ப்ரமோஷன் ஆவது போல பிக் பாஸ் நிகழ்ச்சியும் சற்று டிஆர்பி ரேட்டிங் எற உதவியாக இருந்தது என்றே சொல்லலாம். இந்த சூழலில், அடுத்ததாக விஜய் தொலைக்காட்சி வைல்டு கார்டு போட்டியாளர்களை விரைவாக நிகழ்ச்சிக்குக் கொண்டு வந்துள்ளது.
அதன்படி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற விவரமும் வெளியாகி இருக்கிறது.
நாகப்ரியா
நடிகர் ரானவ்
நடிகை வர்ஷினி
மஞ்சரி நாராயணன்
ரியா தியாகராஜன்
இந்த முறை பல தெரியாத முகங்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறக்கி இவர்களை மக்களுக்கு தெரிய படுத்த இந்த பிரபலங்களை விஜய் தொலைக்காட்சி தேர்ந்தெடுத்துள்ளது. இவர்கள் வந்துள்ளதால் பிக் பாஸ் நிகழ்ச்சி விறு விறுப்பாக சென்று டி.ஆர்.பி ரேட்டிங் அதிகமாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்