சினிமா

பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட கூடாது!

Published

on

பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட கூடாது!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என ஒரு ஆண்டுகளுக்கு மேல் ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில், சென்னை உயர்நீதி மன்றம் பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட தற்காலிமாக தடை விதித்துள்ளதாக உத்தரவிட்டுள்ளது.

Advertisement

பிசாசு 2 படம் வெளியாகாமல் இருப்பதற்கு முக்கியமான காரணமே, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் வைத்துள்ள கடன் பிரச்சினை தான்.  ஏனென்றால், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிசாசு 2 படத்தை தயாரிப்பதற்கு முன்பு “‘இரண்டாம் குத்து’ படத்தின் விநியோக உரிமையை பெற்றிருந்தது. பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் உடனான ஒப்பந்தப்படி, 4.85 கோடியில் 2 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.

எனவே, இந்த தொகையை தங்களுக்கு கொடுத்துவிட்டு தான் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்று பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த  சென்னை உயர்நீதி மன்றம் பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கவேண்டிய பாக்கி தொகையை கொடுக்காமல் பிசாசு 2 படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிடகூடாது  என உத்தரவிட்டுள்ளது.

மேலும், அது மட்டுமின்றி  மனுவுக்கு ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் வரும் நவம்பர் 18ஆம் தேதிக்குள்பதிலளிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டது. எனவே, பிசாசு 2 திரைப்படம் இந்த  ஆண்டு வெளியாவது சந்தேகம் தான் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பாக்கி தொகையை செலுத்தி ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிசாசு 2 படத்தினை வெளியீடுமா இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version