சினிமா

மாளவிகா மேனன் பற்றி அவதூறு பரப்பியவர் கைது

Published

on

மாளவிகா மேனன் பற்றி அவதூறு பரப்பியவர் கைது

பிரபல மலையாள நடிகை மாளவிகா மேனன், தமிழில் ‘இவன் வேற மாதிரி’, ‘விழா’, ‘பிரம்மன்’, ‘வெத்துவேட்டு’, ‘பேய் மாமா’, ‘அருவா சண்ட’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வந்தன.

Advertisement

இதுபற்றி சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்த மாளவிகா, சமூக வலைதளங்களில் கண்ணியமற்ற முறையில் யாரை பற்றியும் எப்படியும் பேசலாம் என்கிற உரிமை இருப்பதாக நினைத்துக்கொண்டு சிலர் செயல்படுகிறார்கள். விழாவுக்கு என்ன டிரெஸ் அணிந்து வரப்போகிறீர்கள் என்று கூட பலர் ஃபோன் செய்து விசாரிப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் மாளவிகா மேனன் பற்றி அவதூறாகப் பதிவிட்டதாக அட்டப்பாடியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பவரை கொச்சி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version