இலங்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியா பயணம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியா பயணம்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) காலை இந்தியா பயணமாகவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் இந்தூரிலுள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் (Indore) உயர்கல்வி நிறுவனத்தில் உரையாற்றவுள்ளார்.
நாளை (22) மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் இந் நிகழ்வில், உயர்கல்வி நிறுவன மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.